இத்தாலி விவகாரம், இந்தியாவை எச்சரிக்கிறது EU

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான இராயதந்திர உறவு முறிவு இப்போது ஐரோப்பிய நாடுகளையும் உள்ளே இழுக்கிறது.

Massimiliano Latorre, Salvatre Girone என்ற இரண்டு இத்தாலிய படையினர் கடந்த வருடம் (2012) இரண்டு இந்திய மீனவர்களை இந்தியாவின் தென் பகுதி கடலில் வைத்து சுட்டு கொன்றிருந்தனர்.

இத்தாலியர்களின் கூற்றுப்படி, இவர்கள் இந்திய மீனவர்களை கடல் கொள்ளையர் என்று கருதியிருந்திருந்தனர். அத்துடன் இத்தாலியின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த பகுதி சர்வதேச கடல், அதனால் இத்தாலியிலேயே இந்த விசாரணை நடாத்தப்படல் அவசியம். ஆனால் இவர்களை கைது செய்த இந்தியா, இந்த விசாரணையை இந்தியாவிலேயே ஆரம்பித்துவிட்டது.

அதேவேளை இந்தியாவுக்கான இத்தாலிய தூதுவர் Mancini பொறுப்பு நின்று இந்தியாவில் தடுத்து வைக்கப்படிருந்த இந்த இருவரையும் இத்தாலி சென்றுவர அனுமதி பெற்றிருந்தார். இந்த இருவரும் இத்தாலில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்கவென்றே சென்றிருந்தனர். இந்த உரிமையை இந்திய நீதிமன்றிலேயே தூதுவர் பெற்றிருந்தனர். ஆனால் அந்த இருவரும் வாக்குறுதி அளித்தபடி இந்தியா திரும்பவில்லை. அதனால் இந்தியாவுக்கான தூதுவர் இந்தியாவை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

இப்போது EU, இந்தியா ஒரு தூதுவரை முடக்குவது சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்கிறது.

அமெரிக்கா மறுபுறத்தில், இது இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான பிணக்கு என கூறி இவ்விடயத்தில் இருந்து விலகி இருக்க முனைகிறது.