இந்தியாவின் Rafale யுத்தவிமான கொள்வனவு 189 ஆக அதிகரிப்பு

அண்மையில் இந்தியா, பிரெஞ்சு தாயாரிப்பான Rafale யுத்தவிமானங்கள் 126 ஐ கொள்வனவு செய்ய இணங்கியிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 189 ஆக உயரலாம் என தெரியவருகிறது. தற்போது பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு எண்ணிக்கை 189 ஆக உயரின், மொத்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$18 பில்லியன் ஆக இருக்கும்.

இந்த உடன்படிக்கையின் கீழ், முதல் 18 விமானக்களும் பிரான்சிலேயே முற்றாக உற்பத்தி செய்யப்படும். ஏனையவை பிரான்சில் தயாரிக்கபட்டு இந்தியாவின் பெங்கலூரில் பொருத்தப்படும்.

பிரான்சின் Dassault Aviation என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த இருவிமானிகள் யுத்த விமானக்களின் அதியுயர் வேகம் Mach 1.8 (2130 km/h), பறக்ககூடிய அதிகூடிய தூரம் 1852 km. இவர் 2000 ஆம் ஆண்டில் முதலில் சேவைக்கு வந்தன. தற்போது 100 இற்கும் மேற்பட்ட இவ்வகை விமானங்கள் பிரெஞ்சு படைகளில் உள்ளன. அவற்றுள் சில மாலி யுத்தத்திலும் பங்குகொள்கின்றன.

கனடா, பிரேசில், மலேசியா, UAE ஆகிய நாடுகளும் இந்த யுத்த விமானத்தை கொள்வனவு செய்யும் நோக்கில் உள்ளன.