இந்தியாவில் குருவுக்கு 10 வருடங்கள், 32 பேர் பலி

GurmeetRam

Guru Gurmeet Ram Rahim Singh என்ற குருவை இந்தியாவின் ஹரியானா மாநில Panchkula நகர நீதிமன்றம் இன்று குற்றவாளி என்று .தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பின்படி இவருக்கு 10 வருடங்கள் சிறை கிடைக்கலாம். இதை அறிந்த அவரின் பக்தர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வன்முறைக்கு 32 பேர் பலியாகியும் உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளதுடன், பல வாகனங்கள் தீ மூட்டப்பட்டும் உள்ளன.
.
2002 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் இந்த குரு தம்மை கற்பழித்ததாக புகார் செய்திருந்தனர். அந்த வழக்கே இன்று குருவை குற்றவாளி என்று தீர்ப்பு கூறியுள்ளது.
.
2002 ஆம் ஆண்டில் இவர் ஒரு பத்திரிகையாளரை கொலை செய்ததாகவும் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த பத்திரிகையாளர் குருவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தாராம்.
.
முன்னர் இந்த குரு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கியதால் காங்கிரஸ் கட்சி அங்கு மெரும்பான்மை வெற்றி பெற்று இருந்தது. அப்போது காங்கிரஸ் இவருக்கு அதியுயர் Z+ பாதுகாப்பு வழங்கி இருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது மோதி இவரை புகழ் பாட, இவரும் பா.ஜ. கட்சிக்கு ஆதரவு வழங்கி அதை வெற்றிபெற வைத்தார்.
.
இவர் இதுவரை குறைந்தது 5 படங்களை எழுதி, இயக்கி உள்ளார். அப்படங்களுக்கான பாடல்களையும் இவர் எழுதி, பாடி உள்ளார். இந்த படங்களில் இவர் நமது MGR போலவே பாத்திரங்களை கொண்டுள்ளார். மேலும் இவர் பல பாடல் இசைத்தடுக்களையும் வெளியிட்டு உள்ளார்.
.

இவருக்கு 3 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உண்டு.
.