இந்தியாவில் பஸ் கால்வாயுள் வீழ்ந்தது, 46 பேர் பலி

இந்தியாவில் பஸ் கால்வாயுள் வீழ்ந்தது, 46 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் பஸ் ஒன்று கால்வாய் ஒன்றுள் (Sharda canal) வீழ்ந்ததால் 46 பேர் பலியாகி உள்ளனர்.

மொத்தம் 34 பேரை மட்டும் காவக்கூடிய இந்த பஸ்சில் 60 பேருக்கு மேலானோர் பயணித்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலம் ஒன்றை உடைத்தே கால்வாயுள் வீழ்ந்து உள்ளது.

தேடுதலுக்கு உதவும் நோக்கில் அதிகாரிகள் கால்வாய்க்கு செல்லும் நீரை நிறுத்தி இருந்தனர். சாரதியும் மேலும் சிலரும் நீந்தி கரையை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மரணித்தோருக்கு 200,000 இந்திய ரூபாய்களையும் ($2,750), படுகாயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாய்களையும் வழங்க பிரதமர்

மோதியின் அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 150,000 பேர் வீதி விபத்துக்களில் பலியாகின்றனர். மிகையான வேகம், சாரதி கடுப்பாட்டை இழத்தல் ஆகியன பிரதான காரணங்கள் ஆகும்.