இந்தியாவுக்கு ரஷ்ய S-400, அமெரிக்கா தடைவிதிக்குமா?

S-400

ரஷ்யாவின் S-400 வகை விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் ஐந்தை இந்தியா கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. சுமார் $6 பில்லியன் பெறுமதியான இந்த கொள்வனவு அமெரிக்காவின் ரஷ்யா மீதான தடைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
இந்தியாவின் இந்த ஏவுகணை கொள்வனவு அமெரிக்காவின் Countering America’s  Adversaries Through Sanctions Act (CAATSA Section 231) என்ற சட்டத்துக்கு முரணானது. இந்த சட்டப்படி அமெரிக்கா இந்தியாவை தடைகள் மூலம் தண்டிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா அதை செய்யுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
.
ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் ஆயுத பலத்தால் வளரும் இந்நாளில் அமெரிக்கா குறைந்தது இந்தியாவையாவது தன் பக்கம் இழுத்தல் அவசியம். அதனால் இந்தியா மீது தடை விதித்தல் இலகுவான காரியம் அல்ல.
.
Cold-war காலத்தில் இந்தியாவுக்கு ஆயுதங்கள் எதையும் விற்காத அமெரிக்கா இன்று சுமார் $15 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது.
.

S-400 விமான எதிர்ப்பு ஏவுகணை 185 km உயரத்தில் பறந்து, 400 km தொலைவில் வரும் எதிரி விமானங்களை கண்டறிந்து தாக்கக்கூடியது. விமானங்களை மட்டுமன்றி, எதிரிகளின் ஏவுகணைகளையும் இந்த ஏவுகணை கண்டறிந்து அழிக்கக்கூடியது. சுமார் 1,893 kg எடை கொண்ட இந்த ஏவுகணையின் அதி கூடிய வேகம் 11,000 mile/hr ஆக இருக்கும்.
.