இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு 28 பேர் பலி

Kashmir

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று செவ்வாய் இடம்பெற்ற மோதல்களுக்கு 7 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதற்கு ஒருநாள் முன், திங்கள் அன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு 6 பாகிஸ்தான் பொதுமக்களும் 1 இந்திய படையினரும் பலியாகி இருந்தனர்.
.
அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுத குழு ஒன்று 19 இந்திய இராணுவ வீரரை கொலை செய்தபின் இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் காஸ்மீர் எல்லைப்பகுதிகளில் 28 பொதுமக்களும் பல படையினரும் பலியாகி உள்ளனர்.
.

இரண்டு படையினரின் எறிகணைகள் எல்லை தாண்டி உயிர்களை கொலை செய்து வருகின்றன. ஆனால் இருதரப்பும் மற்றைய படையை குற்றம்சாட்டி வருகின்றன.
.