இந்திய இராணுவ விமானம் வங்கத்தில் தொலைவு

Antonov32

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வங்காள விரிகுடாவில் இன்று வெள்ளி தொலைந்துள்ளது. ரஷ்யா தயாரிப்பான Antonov 32 வகை விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் தீவுகளை நோக்கி பறக்கையிலேயே இது தொடர்புகளை இழந்துள்ளது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
இந்த விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்டு 15 நிமிடங்கள் அளவில் தொடர்புகள் இழக்கப்பட்டு உள்ளது. மொத்த பயண நேரம் 3 மணித்தியாலங்கள் என்றும், 3 மணித்தியாலங்களின் பின் விமானம் அந்தமானை அடையவில்லை என்றும் கூறப்படு உள்ளது.
.
சென்னை நேரப்படி காலை 8:30 க்கு புறப்பட்ட இந்த விமானம் 11:30 க்கு தரை இறக்கியிருக்க வேண்டும். ஆனால் அது இப்போ தவறி உள்ளது.
.
இந்தியாவும் சோவியத்தும் நண்பர்களாக இருந்த காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இவ்வகை விமானங்களில் சுமார் 100 இன்னமும் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
.