இந்திய சாகச விமான விபத்து, ஒரு விமானி பலி

Karnataka

.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இன்று செய்வாய் இடம்பெற்ற சாகச விமான பயிற்சி ஒன்றின்போது இரண்டு விமானங்கள் மோதி உள்ளன. இந்த விபத்துக்கு ஒரு இராணுவ விமானி பலியாகி உள்ளார். இரண்டு விமானிகள் காயமடைந்தும் உள்ளனர். அங்கு இடம்பெறவிருந்த Aero India 2019 என்ற விமான காட்சி மற்றும் சாகச நிகழ்வுகளில் கலந்து கொள்ள முன்பயிற்சி செய்த விமானங்களே விபத்துக்கு உள்ளாகின.
.
பெங்களூர் நகரில் உள்ள Yelahanka என்ற விமான தளத்திலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. இந்த சாகச விமான அணி Surya Kiran Aerobatic Team என்று அழைக்கப்படும். இந்த விமானங்கள் Hawk MK-132 என்ற வகை பிரித்தானிய தயாரிப்புகள் ஆகும்.
.
விபத்தின்போது இந்த இரண்டு விமானங்களும் விம்ப அமைப்பில், ஒரு விமானம் வழமைபோல் பறக்க மற்றைய விமானம் தலைகீழா முதல் விமானத்தின்மேல் இருக்கும் வகையில், (mirror maneuver) பறந்துள்ளன.
.
புதன்கிழமை ஆரம்பமாகவிருந்த ஐந்து-நாள் காட்சிகள் குறித்தபடி இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
.


.