இந்திய பல்கலைக்கழகங்கள் உள்ளும் குளறுபடிகள்

Jio

இந்தியாவின் பல்கலைக்கழகங்களுள் இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பாக அமெரிக்காவின் New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை இந்திய உயர் கல்வியியுள் பிரதமர் மோதி தலைமயிலான பா. ஜ. கட்சி செய்யும் குளறுபடிகளை சாடியுள்ளது.
.
கடந்த மே மாதம் Times Higher Education World University Rankings வெளியிட்ட ஆய்வுகளின்படி எந்தவொரு இந்திய பல்கலைக்கழகமும் உலகின் முதல் 100 அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஆய்வுக்கு உலகின் 1,000 பல்கலைக்கழகங்கள் உட்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவில் 760 பல்கலைக்கழகங்களும், 38,498 உயர்கல்வி கல்லூரிகளும் (college) உள்ளன.
.
மோதி அரசு சில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு Institutes of Eminence தரத்தை வழங்கி உள்ளது. இவை மத்திய அரசின் மானியங்களை பெறும் உரிமை கொண்டவை. அத்துடன் 60 பல்கலைக்கழகங்களை சுயாதீன அமைப்புகள் ஆக்கியுள்ளது. இதுவரை இயங்கிய University Grants Commission நிறுத்தப்பட்டு, Higher Education Commissionனும் உருவாக்கப்பட்டுள்ளது.
.
மேற்கூறப்பட்ட Institutes of Eminence தரத்துள் Jio Institute என்ற முன்பின் அறியாத பல்கலைக்கழகம் ஒன்றும் இடப்பெற்றுள்ளது. இந்த பல்கலைக்ககத்துக்கு ஒரு கட்டிடமோ, மாணவரோ, அல்லது விரிவுரையாளரோ இல்லை. இதற்கு ஒரு web pageம் இல்லை. இந்நிலையில் Jio ஒரு பல்கலைக்கழகம் ஆக கருதப்பட, அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானியே (Mukesh Ambani) காரணம். வரும் காலத்தில் கட்டப்படவுள்ள Jio பல்கலைக்கழகம் தற்போது முகேஷ் அம்பானியின் திட்டம் மட்டுமே.
.
2014 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி அப்போதைய பா. ஜ. கட்சி வேட்பாளர் மோதியின் வெற்றிக்கு பெரும் ஆதரவு வழங்கியவர். முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் சுமார் $40 பில்லியன் எனப்படுகிறது.
.
அதேவேளை Baba Bhimrao Ambedkar பல்கலைக்கழகத்தில் சுமார் 200,000 மாணவர்கள் உள்ளதாகவும் ஆனால் அங்கு 2015 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு பரீட்சையும் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
.
இந்த ஆண்டுக்கான Times Higher Education World University Rankings பட்டியலில் சிங்கப்பூரின் National University of Singapore 22 ஆம் இடத்திலும், சீனாவின் Peking University 27 ஆம் இடத்திலும், சீனாவின் Tsinghua University 30 ஆம் இடத்திலும், University of Hong Kong 40 ஆம் இடத்திலும், Hong Kong University of Science and Technology 44 ஆம் இடத்திலும், சிங்கப்பூரின் Nanyang Technological University 52 ஆம் இடத்திலும், Chinese University of Hong Kong  58 ஆம் இடத்திலும் இருந்துள்ளன.

.