இந்திய விமானம்தாங்கி Viraat ஓய்வு

INSViraat

இந்தியாவின் விமானம்தாங்கி கப்பலான INS Viraat சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறது. Viraat தற்போது சேவையில் இருக்கும் உலகின் மிக பழைய விமானம்தாங்கி கப்பலாகும். 1959 ஆம் ஆண்டு முதல் HMS Hermes என்ற பெயரில் பிரித்தானியாவின் கடல் படையினால் பாவிக்கப்பட்ட இந்த விமானதாங்கி கப்பல் 1987 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவின் கடற்படையில் சேவையில் ஈடுபட்டது. அவ்வகையில் இது 57 வருடம் பழமைவாய்ந்த விமானந்தாங்கி கப்பலாகும்.
.
இந்த விமானம்தங்கி 16 Sea Harrier வகை யுத்த விமானங்களையும் 10 ஹெலிகளையும் காவிச்செல்லும் திறன் கொண்டது. இதில் செயல்பட்ட Sea Harrier வகை யுத்த விமானங்கள் இந்த ஆண்டின் முன்பகுதியில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளன.
.
இலங்கையில் IPKF இயங்கிய போது அவர்களுக்கும் இந்த 750 அடி நீளமான INS Viraat பெரிதும் உதவி இருந்தது. குறிப்பாக IPKF நடாத்திய Operation Jupiter என்ற 1989 ஆம் ஆண்டு தாக்குதல்களிலும் இந்த விமானம்தாங்கி பங்கு கொண்டிருந்தது.
.

புலிகளும், பிரேமதாசாவும் நட்பு கொண்டாடிய நாட்களில் இந்த விமானம் தங்கியில் இருந்த Indian Marine Special Forceசும் அவர்கள் பயன்படுத்தும் Sea King வகை ஹெலிகளும் இந்திய தூதுவரக ஊழியர்களையும் தேவைப்படின் காப்பாற்றவும் தயாராக இருந்தன.
.