இந்திய விருப்பத்துக்கு மாறாக மாலைதீவிலும் சீனா

Maldives

மாலைதீவு சுதந்திரம் அடைந்ததை முதலில் அனுசரித்த நாடு இந்தியா. அன்றுமுதல் மாலைதீவு இந்தியாவுடன் நெருக்கம் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. மாலத்தீவுக்கு தேவையான பொருட்களை இந்தியாவும், இலங்கையுமே பெருமளவில் வழங்கி வந்துள்ளன. ஆனால் தற்போது மாலைதீவு இந்தியாவையும் மீறி சீனாவின் நட்பு நாடாக மாறியுள்ளது.
.
2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி மாலைதீவு சென்றிருந்தார். அப்போது சீனாவும், மாலத்தீவும் பல உடன்பாடுகளை செய்துகொண்டன. மாலைதீவு சீனாவின் One-Road-One-Belt திட்டத்திலம் இணைந்து கொண்டது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக, சீனாவின் 3 யுத்த கப்பல்கள் மாலைதீவில் நங்கூராமிடவும் அனுமதிக்கப்பட்டது.
.
மாலைதீவு-இந்தியா விரிசலும் முதன்மையான உதாரணம் மாலைதீவு விமானநிலைய அபிவிருத்தி திட்டம் கைவிடப்பட்டமையே. மாலைதீவு தனது விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணியையும், 25 வருடங்களுக்கு அவற்றை செயல்படுத்தும் பணியையும் இந்தியாவின் GMR Group என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தது. அனால் சீனாவின் நெருக்கத்தின் பின் இந்தியாவின் உடன்பாடுகள் இரத்து செய்யப்பட்டன. அதனால் விசனம் கொண்ட இந்தியா international arbitrary tribunal உதவியை நாடியது. Tribunal தீர்ப்புப்படி மாலைதீவு இந்தியாவுக்கு $270 மில்லியன் தண்டமும் செலுத்தியது.
.
உண்மையில் இந்த தண்ட தொகையை சீனாவே வழங்கியது என்றும் கூறப்படுகிறது. தற்போது சீனாவே மாலைதீவு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் Male வரை ஒரு பாலம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. சுமார் 7 km நீளம் கொண்ட இந்த பாலம் China-Maldives Friendship Bridge என்றழைக்கப்படும்.
.
இலங்கையை போலவே மாலைதீவும் சீனாவின் கடனில் மூழ்கி உள்ளது. மாலைதீவின் வெளிநாட்டு கடன்களில் 70% கடன் சீன கடன் என்று கூறப்படுகிறது.
.

மாலைதீவின் தலைநகருக்கு அண்மையில் கடலை நிரப்பி உருவாக்கப்பட்ட நிலத்தில் தற்போது சீனா 7,000 வீடுகளை அமைத்து வருகின்றன. 2013 ஆம் ஆண்டிலும் இவ்வகை வீடுங்கள் 1,000 சீனாவால் அமைக்கப்பட்டு இருந்தன.
.