இந்திய வைத்தியசாலை தீக்கு 23 பேர் பலி

India

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள Bhubaneswar என்ற இடத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீக்கு குறைந்தது 23 பேர் பலியாகி உள்ளனர். SUM என்ற இந்த வைத்தியசாலையில் உள்ள dialysis வைத்திய பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. தீ அணைக்கும் படையின் கருத்துப்படி மின்சுற்று காரணமாகவே (short circuit) இந்த விபத்து இடம்பெற்று உள்ளது.
.
திங்கள் மாலை சுமார் 7:45 மணியளவில் இடம்பெற்ற இந்த தீக்கு மேலும் சுமார் 120 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். இந்த வைத்தியசாலை சுமார் 1000 படுக்கைகளை கொண்டது.
.

2011 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் உள்ள வைத்தியசாலை இடம்பெற்ற இன்னோர் தீ ஒன்றுக்கு 89 பேர் பலியாகி இருந்தனர்.
.