இந்து சமுத்திர தீவுகளை பிரித்தானிய கைவிடவேண்டும்

DiegoGarcia

இந்து சமுத்திரத்தில் உள்ள Chagos தீவுகளை பிரித்தானியா மீண்டும் Mauritius நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்று இன்று திங்கள் கேட்டுள்ளது ஐ.நா. நீதிமன்றம் (International Court of Justice). இந்த தீர்ப்பு சட்டபடியானது அல்ல (non-binding) என்றாலும், Mauritius நாட்டுக்கு இது ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது.
.
இந்த தீவுகளிலேயே அமெரிக்காவின் டியேகோ கார்சியா (Diego Garcia) இராணுவ மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. ஆசிய-பசுபிக் பகுதிகளில் அமெரிக்கா கொண்டுள்ள இரண்டு மிக பெரிய படை தளங்களுள் இது ஒன்று (மற்றையது குஆம், Guam). இங்கிருந்தே அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல்களை முற்காலங்களில் செய்திருந்தது.
.
பிரித்தானியவின் ஆட்சியில் Mauritius இருந்த காலத்தில் Chagos தீவுகள் Mauritius இன் அங்கமாகவே இருந்தன. ஆனால் Mauritius க்கு சுதந்திரம் வழங்க முன் பிரித்தானிய Chagos தீவுகளை Mauritius இல் இருந்து பிரித்து, பிரித்தானியாவின் நேரடி ஆட்சிக்குள் எடுத்திருந்தது. அவ்வாறு பிரித்தானிய செய்தது தவறு என்று ஐ.நா. நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
.
Chagos தீவுகளை பிரித்த பின், அங்கிருந்த ஆதிவாசிகளை பிரித்தானியாவும், அமெரிக்காவும் கட்டாயமாக வெளியேற்றி இருந்தன. வெளியேறியவர்கள் மீண்டும் திரும்ப அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது இந்த தீவுகளில் அமெரிக்க படைகள் மட்டுமே உள்ளன.
.
இந்த தீவுகள் மாலைதீவின் தெற்கே சுமார் 500 km தூரத்தில் உள்ளன. ஆனால் Mauritius இல் இருந்து Chagos தீவுகள் சுமார் 2,000 km தூரத்தில் உள்ளன.
.
பிரித்தானிய இந்த தீர்ப்பை ஏற்று அங்கிருந்து வெளியேறுமா என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
.