இந்தோனேசியாவின் சுனாமிக்கு 384 பேர் பலி

Sulawesi

நேற்று வெள்ளி (September 28) மாலை இந்தோனேசியாவை தாக்கிய 7.5 அளவிலான நில நடுக்கம் சுனாமியையும் தோற்றுவித்தது. தற்போது வெளிவரும் செய்திகளின்படி இந்த சுனாமிக்கு குறைந்தது 384 பேர் பலியாகி உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
.
இந்தோனேசியாவின் Sulawesi தீவை தாக்கிய இந்த சுனாமி சுமார் 380,000 குடியிருப்பாளரை கொண்ட Palu என்ற நகரையே கடுமையாக தாக்கி உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட 384 பேரும் Palu நகரிலேயே பலியாகி உள்ளனர். அதேவேளை Donggala நகரும் Mamiju பகுதியும் கூடவே பாதிப்புக்கு உள்ளாகின.
.
சுனாமி தாக்கியபோது Palu நகரின் கடற்கரையில் இசை நிகழ்ச்சி ஒன்றும் நிகழ்ந்ததாம். அந்த நிகழ்வில் பங்குகொண்டிருந்தோரின் நிலைமை இதுவரை அறியப்படவில்லை.
.
சில இடங்களில் இந்த சுனாமி 3 மீட்டர் உயர அலைகளை உருவாக்கி இருந்தது.
.
கடந்த ஆகஸ்ட் மாத நில நடுக்கத்துக்கு இந்தோனேசியாவில் சுமார் 500 பேர் பலியாகி இருந்தனர்.
.
2004 ஆம் ஆண்டு 9.1 அளவிலான நில நடுக்கம் உருவாக்கிய சுனாமிக்கு அங்கு சுமார் 230,000 பேர் பலியாகி இருந்தனர். இலங்கை, தாய்லாந்து உட்பட பல நாடுகளிலும் அந்த சுனாமி பல்லாயிரம் பேரை பலியாக்கி இருந்தது.
.
Youtube சுனாமி வீடியோ
.