இன்று இருவரை விண்ணுக்கு அனுப்பியது சீனா

ChinaSpace

இன்று இரண்டு சீன விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது சீனா. இவர்கள் இன்று பெய்ஜிங் நேரப்படி காலை 7:30 க்கு அனுப்பப்பட்டனர். சீன விண்வெளி அமைப்பு இதற்கு முன் ஐந்து தடவைகள் தம் வீரர்களை விண்வெளி அனுப்பி இருந்தது. ஆனால் இம்முறையே இந்த சீன வீரர்கள் 30 நாட்கள் வரை விண்வெளியில் இருப்பர்.
.
இன்று ஏவப்படும் விண்கலம் கடந்த மாதம் ஏவப்பட்ட Shenzhou-II என்ற விண் ஆய்வுகூடத்துடன் இரண்டு நாட்களின் பின் இணையும். அந்த ஆய்வுகூடத்தில் 28 நாட்கள் இருக்கப்போகும் இந்த வீரர் பின் பூமிக்கு திரும்புவார்.
.
உண்மையில் இந்த செயல்பாடுகள் 2018 ஆம் ஆண்டில் சீனா ஏவப்போகும் Tianhe-I என்ற நிரந்தர ஆய்வுக்கூடத்துக்கான பயிற்சியாகும்.
.
தற்போது Itenational Space Station (ISS)மட்டுமே விண்ணில் ஆய்வுகூடத்தை கொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாடுகள் இந்த ISS வேலைப்பாடுகளில் இணைந்து செயல்பட்டாலும் சீனா இணைய அமெரிக்கா அனுமதிக்கவில்லை. அமெரிக்க சட்டம் சீனாவுடன் இணைந்து செயல்படுவதை தடை செய்துள்ளது. பதிலாக சீனா தனது சுய விண்வெளி ஆய்வுகூடத்தை அமைக்கும் பணியில் இறங்கியது.
.
தற்போதை ISS ஆய்வுகூடம் 2024 ஆம் ஆண்டுவரையே செயல்படும். ISS க்கு பதிலாக வேறு ஆய்வுகூடம் அனுப்பாவிடில், 2024 க்கு பின் சீனா மட்டுமே விண்வெளி ஆய்வுகூடத்தை கொண்டிருக்கும்.
.

2025 ஆம் ஆண்டில் சீனா சந்திரனுக்கு சீன விண்வெளி வீரரை அனுப்பவுள்ளது.
.