இன்று முதல் Googleலில் இலங்கை வீதிப்படம்

GoogleNelliady

Google சேவையில் இன்று Google Map ஆகும். இந்த சேவை உலகின் பல நாட்டு வீதிகளை உலகின் எப்பாகத்தில் இருந்தும் பார்க்க வசதி செய்திருந்தது. இன்று முதல் இலங்கையின் வீதிகளையும் இந்த சேவையில் பார்க்கலாம். இலங்கையுடன் மொத்தம் 76 நாட்டு வீதிகளை இந்த சேவை மூலம் பார்க்கலாம்.
.
Google தேடலில் Sri Lanka என்று தேடினால், இலங்கை சம்பந்தமான தரவுகளுடன் இலங்கையின் வரைபடமும் வழங்கப்படும். அந்த வரைபடத்தை தொடர்ந்தால் இலங்கையின் முழு வரைபடம் தோன்றும். அந்த வரைபடத்தி முடிந்தவரை பெருப்பித்து விரும்பிய இடத்தில் மஞ்கள் நிற மனித அடையாளத்தை (Pegman) இழுத்து சென்று வீதியில் விட்டால் அந்த இடத்து வீதிப்படம் தெரியும்.
.
இலங்கை வீதிகளை படமாக்கல் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இருந்தது. மோத்தல் சுமார் 50,000 km வீதிகள் இவ்வாறு படமாக்கப்பட்டது.
.