இரண்டு அமெரிக்கரை காவவுள்ளது SpaceX

SpaceX

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX புதன்கிழமை (மே 27) இரண்டு அமெரிக்க விண்வெளிவீரரை International Space Station (ISS) க்கு எடுத்து செல்லவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளின் பின் அமெரிக்கர் ISS க்கு அமெரிக்காவின் கலத்தில் பயணிப்பது இதுவே முதல் தடவை. கடந்த 9 வருடங்களாக அமெரிக்கர் ரஷ்யாவின் ஏவுகலம் மூலமே ISS சென்று வந்தனர்.
.
புதன்கிழமை Robert Behnken, Douglas Hurley ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களே SpaceX கலத்தில் ISS செல்லவுள்ளனர். Florida மாநிலத்தில் உள்ள Kennedy Space Center இல் இருந்து இவர்களை ஏவ பயன்படும் Falcon 9 என்ற ஏவுகணை மீண்டும் தரையிறங்க, இருவரும் உள்ள கலம் 19 மணித்தியாலங்கள் பூமியை சுற்றி பின் ISS உடன் இணையும்.
.
Falcon 9 ஏவுகலம் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 83 தடவைகள் விண்ணுக்கு சென்றுள்ளது. ஆனால் இம்முறையே மனிதர்களை முதல் முறையாக காவுகிறது. இது இரண்டு தடவைகள் விபத்துகளுக்கும் உள்ளாகியது.
.
SpeaceX ஏவுகலத்தின் சில பாகங்கள் மீண்டும் பாவனை செய்யப்படக்கூடியவை. அதனால் ஏவல்களின் செலவு குறைக்கப்பட்டு உள்ளது.
.
விண்ணுக்கு அமெரிக்கரை காவும் பணியை நிறுத்திய NASA தற்போது அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்துகிறது. SpaceX செய்யும் பணியும் அவ்வகையினதே.
.