இரண்டு விமானிகள், இரண்டு பணியாளர், ஒரு பயணி

Parked_Aircrafts

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு அதிகம் பாதிப்பு அடைந்த துறை பயணிகள் விமான சேவையே. தற்போது பயணிகள் விமான சேவைகள் தமது நாளாந்த சேவைகளை 70% முதல் 80% ஆல் குறைத்து உள்ளன. ஆனாலும் சில விமானங்கள் தொடர்ந்தும் ஏறக்குறைய வெறுமையாகவே பறக்கின்றன.
.
கடந்த வெள்ளிக்கிழமை மொத்தம் 76 ஆசங்களை கொண்ட American Airlines flight 4511 அமெரிக்காவின் Washington DC யில் இருந்து New Orleans நகரத்துக்கு Carlos என்ற 1 பயணியுடன் மட்டுமே பறந்துள்ளது. அந்த விமானத்தை 2 விமானிகள் செலுத்த, 2 பணியாளர்கள் பராமரித்து உள்ளனர்.
.
மார்ச் 27 ஆம் திகதி Sheryl என்ற பெண் மரண படுக்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க Washington DC யில் இருந்து Boston சென்றார். அந்த விமானத்திலும் அப்பெண் மட்டுமே தனி பயணி. அந்த விமானத்திலும் 2 விமானிகளும், 2 பணியாளர்களும் பணியாற்றி உள்ளனர். அந்த ஒரு பயணிக்கு Business class ஆசனமும் இலவசமாக வழங்கப்பட்டது. அவர் மீண்டும் Washington DC திரும்பியபோதும் தனி பயணியே.
.
இந்த வருடம் உலக அளவில் விமான சேவைகள் சுமார் $252 பில்லியன் வருமானத்தை இழக்கும் என்று IATA கூறியுள்ளது. அத்துடன் விமான நிலையங்களும், அங்கு உள்ள வர்க்கங்களும் கூடவே வருமானத்தை இழக்கும்.
.
ஏப்ரல் 2 ஆம் திகதி அளவில் ஹாங் காங் நகரில் இருந்து வெளியேறிய விமானங்களில் ஒவ்வொரு 100 ஆசனங்களுக்கு சுமார் 2.7 பயணிகளே சென்றுள்ளார். ஜனவரி 24 ஆம் திகதி 86,569 பயணிகள் வெளியேறி இருந்த இந்த விமான நிலையத்தில் இருந்து ஏப்ரல் 2 ஆம் திகதி 2,349 பயணிகள் மட்டுமே வெளியேறி உள்ளனர்.
.
British Airways 75% விமானங்களை நிறுத்தியுள்ளது.
Lufthansa 95% விமானங்களை நிறுத்தியுள்ளது.
Air France\KLM 90% விமானங்களை நிறுத்தியுள்ளது.
Singapore Airlines 96% விமானங்களை நிறுத்தியுள்ளது
.
உலக அளவில் விமான சேவை $2.7 டிரில்லியன் பெறுமதி கொண்டது. அதன்படி விமான சேவை உலக GDP யின் 3.6% பங்கை கொண்டது.
.
பயணிகள் இல்லாது பறக்கும் விமானங்கள், பயணிகளின் பொதிகளுக்கு பதிலாக வேறு பொதிகளை காவி சென்று சிறிது பணம் பெறுகின்றன.
.