இராணுவ செலவுகளை US $35 பில்லியன் ஆல் குறைக்கும் ஐரோப்பா

NATO வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது ஐரோப்பிய நாடுகளின் இராணுவ வரவுசெலவு ஒதுக்கீடுகள். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய NATO நாடுகளின் இவ்வருடத்துக்கான இராணுவ வரவுசெலவு சுமார் US $35 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வகை குறைப்பு அடுத்துவரும் வரும் வருடங்களில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதுவரை NATO வின் செலவுகளின் சுமார் 62% மட்டுமே செலுத்தி வந்த அமெரிக்கா இப்போது சுமார் 75% செலுத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பங்களிப்பு குறைவதே இதற்கு காரணம். இதேவேளை அமெரிக்காவும் தனது இராணுவ செலவுகளை பெருமலவில்குரைத்து வருகிறது.

தற்போது அமெரிக்கா தனது GDP இன் 4,8% ஐ இராணுவத்தில் செலவிடுகிறது.அனால் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி என்பன முறையே 2.6%, 2.3%, 1.4% களை இராணுவத்தில் செலவு செய்கின்றன.

தற்போது அமெரிக்கா சுமார் $700 பில்லியன்களையும், சீனா 130 பில்லியன்களையும், ரஷ்யா $ 64 பில்லியன்களையும், இந்தியா $ 46 பில்லியன்களையும் வருடாந்தம் இராணுவத்தில் செலவு செய்கின்றன.