இரு முறை வாக்களிக்க அழைக்கிறார் சனாதிபதி ரம்ப்

இரு முறை வாக்களிக்க அழைக்கிறார் சனாதிபதி ரம்ப்

புதன்கிழமை தனது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க சனாதிபதி ரம்ப் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ஆதரவாளர்களை இரண்டு முறை வாக்களிக்க அழைத்துள்ளார். ஆனால் அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ளார் North Carolina மாநில தேர்தல் அதிகாரி Karen Brinson.

கரோனா காரணமாக பல அமெரிக்க மாநிலங்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறைமையை நடைமுறை செய்கின்றன. அமெரிக்காவில் வாக்களிப்பு முறைமைகளை வகுப்பது மாநிலங்களே. ஆனால் தபால் மூல வாக்களிப்பை ரம்ப் விரும்பவில்லை.

ரம்ப் தமது North Carolina மாநில ஆதரவாளர்களை முதலில் தபால் மூலம் வாக்களித்து, பின் நேரடியாக சென்றும் வாக்களிக்க கூறியுள்ளார். தேர்தல் திணைக்களம் முறைப்படி செயல்பட்டால் தபால் மூலம் வாக்களித்தோர் நேரடி வாக்களிப்பில் தடுக்கப்படல் வேண்டும் என்றும் ரம்ப் கூறியுள்ளார். அவ்வாறு தடுக்கப்படாவிடின், இரண்டாம் முறை வாக்களியுங்கள் என்றுள்ளார் ரம்ப்.

தற்போது கணிப்பு வாக்கெடுப்புகளில் ரம்ப் வீழ்ச்சி அடைந்துள்ளார். ரம்புக்கு தற்போது சுமார் 42% ஆதரவே உள்ளது. அதேவேளை Democratic கட்சியை சார்ந்த முன்னாள் உதவி சனாதிபதி பைடெனுக்கு (Biden) 50% ஆதரவு உள்ளது.

அமெரிக்காவில் சனாதிபதியை தீர்மானிப்பது ஒரு சில இடைநிலை மாநிலங்களே (swing states). சில மாநிலங்கள் எப்போதுமே Democric கட்சிக்கு வாக்களிக்கும். வேறு சில மாநிலங்கள் எப்போதுமே Republicn கட்சிக்கு வாக்களிக்கும். Texas, Florida, Michigan, Pennsylvania போன்ற சில swing states நிலைமைக்கு ஏற்ப இரண்டு கட்சிகளையும் ஆதரிக்கும்.