இலங்கைக்கு ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பசுக்கள்

Wellard

ஆஸ்திரேலியாவில் இருந்தும், நியூசிலாந்தில் இருந்தும் பெருமளவு இளம் பசுக்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று நடைமுறை செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பண்ணை நிறுவனமான Wellard Limited இந்த பணியில் ஈடுபட்டு உள்ளது.
.
அடுத்துவரும் சில வருடங்களில் சுமார் 20,000 இளம் பசுக்கள் இலங்கை வரும். அதில் ஒரு பகுதியாக 2,000 பசுக்கள் தற்போது இலங்கை வந்துள்ளன. இந்த பசுக்கள் குளிர்மையான காலநிலையை விரும்புவதால், இவை மலையகத்து இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த பசுக்களால் இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
சுமார் 3 வருடங்களின் முன் இந்த பசுக்களின் விலை, சீனாவில் நிலவிய அதீத கேள்வி காரணமாக, மிக உயர்வாக இருந்தது. அப்போது பசு ஒன்று சுமார் $2,000 விலையை கொண்டிருந்தது. அப்போது சீன வருடம் ஒன்றில் 92,000 பசுக்களை கொள்வனவு செய்திருந்தது. ஆனால் தற்போது சீனாவில் கேள்வி குறைந்துள்ளது. அதனால் பசுக்களின் விலையும் குறைந்துள்ளது. கடந்த வருடம் சீனா 56,000 பசுக்களையே கொள்வனவு செய்திருந்தது.
.

இலங்கைக்கு Friesian Jersey cross வகை பசுக்களே எடுத்துவரப்படும்.
.