இலங்கைக்கு இலவச விசா

SriLanka

மொத்தம் 48 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு இலவச விசா வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு சுமார் 250 பேர் பலியாகிபின் இலங்கைக்கான உல்லாச பயணிகளின் வரவு வீழ்ச்சி அடைந்திருந்தது. உல்லாச பயணிகளை மீட்டும் இலங்கைக்கு இழுக்கும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது.
.
தாக்குதலின் பின் இலங்கைக்கான உல்லாச பயணிகளின் வரவு 70.8% ஆக குறைந்து இருந்தது.
.
இலவச விசா கிடைக்கும் நாடுகளுள் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா, இந்தியா, சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, டென்மார்க், சுவீடன் ஆகியனவும் அடங்கும்.
.
இதுவரை இலங்கை விசாவுக்கு அந்நியர் சுமார் $20 முதல் $40 வரையான கட்டணம் செலுத்தி இருந்தனர்.
.
இந்த கட்டன தவிர்ப்பு குறைந்தது 6 மாத காலத்துக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
.
உல்லாச பயண வருமானம் இலங்கையின் 3ஆவது பெரிய வருமானம் ஆகும். இது சுமார் $4.4 பில்லியன் வருமானத்தை இலங்கைக்கு வழங்குகிறது. இலங்கையர் நாட்டுக்கு பணம் அனுப்புதல் முதலாம் இடத்திலும், ஆடை உற்பத்தி இரண்டாம் இடத்திலும் உள்ளன.

.