இலங்கைக்கு ஊழல் சுட்டெண் 37

TI_CPI

Transparency International (TI) நிறுவனம் 2015 ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் சுட்டெண்ணை அறிவித்துள்ளது. இந்த சுட்டெண்படி 100 புள்ளியை பெற்ற நாடு ஊழல் எதுவும் அற்ற நாடாகும். கடந்த வருடத்துக்கான இலங்கையின் ஊழல் சுட்டெண் 37 மட்டுமே. மொத்தம் 170 நாடுகள் உள்ளடக்கப்பட்ட இந்த கணிப்பில் இலங்கை 83 ஆம் இடத்தில் உள்ளது.
.
இந்த கணிப்பில் முதல் 10 இடங்களையும் எடுக்கும் நாடுகள் டென்மார்க் (91%), பின்லாந்து (90%), சுவீடன் (89%), நியூசிலாந்து (88%), நெதர்லாந்து (87%), நோர்வே (87%), சுவிட்சர்லாந்து (86%), சிங்கப்பூர் (85%), கனடா (83%), ஜெர்மனி (81%) ஆகும்.
.
இந்தியா 38% புள்ளிகளை எடுத்து 76 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 30% புள்ளிகளை எடுத்து 117 ஆவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் 25% புள்ளிகளை எடுத்து 139 ஆம் இடத்தில் உள்ளது.
.

சோமாலியா 8% புள்ளிகளை எடுத்து இறுதி இடத்தில் உள்ளது.
.