இலங்கையில் சீனா U$ 500 மில்லியன் முதலீடு

CHEC

அண்மையில் சீனாவின் CHEC (China Harbor Engineering Company) $500 மில்லியன்னுக்கும் அதிகம் பெறுமதியான 3 கட்டமைப்பு வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த உடன்படிக்கை November 14ம் திகதி ஏற்படுத்தப்பட்டதாக சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு 250 அறைகளை கொண்ட ஒரு உல்லாச விடுதியை கட்டுவதாகும். இதில் ஒரு வரிகள் அற்ற வர்த்த நிலையமும் அமையும். இதே சீன நிறுவனம் 209 அறைகள் கொண்ட இன்னுமோர் விடுதியை இங்கு இந்த வருட ஆரம்பத்தில் திறப்புவிழ செய்திருந்தது.

இரண்டாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு golf விளையாடும் இடத்தை கட்டுவதாகும். இவ்விடம் ஒரு உல்லாச விடுதியையும் கொண்டிருக்கும்.

மூன்றாவது திட்டம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் அருகில் 200 அறைகளையும் 1000 வாகன தரிப்பிடங்களையும் கொண்ட உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதாகும்.

இந்த திட்டங்களின் மொத்த திகை 540 மில்லியன் முதல் 640 மில்லியன் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.