இலங்கையில் யுத்த குற்றத்தை விசாரிக்க ஐ.நா. முடிவு

Lanka_UN

இலங்கையில் யுத்தம் முடிந்து 5 வருடங்களின் பின் ஐ.நா. அங்கு யுத்த குற்றங்கள் நடைபெற்றனவா என்று விசாரிக்க வியாழன் (2014-03-27) முடிவு செய்துள்ளது. ஐ.நாவின் பிரிவான The UN Human Rights Council இல் நடைபெற்ற அமர்வில் இந்த விசாரணைக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 23 நாடுகளும் எதிராக சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளும் வாக்கு அளித்துள்ளன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.
முன்னர் தாம் இந்த விசாரணைக்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக இந்தியா கூறி இருந்தாலும், இறுதியில் வாக்களிப்பதை தவிர்த்துள்ளது. இந்தியாவின் வாக்கு முடிவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை என்பதை உணர்து உள்ளூர் அரசியலுக்கு ஏற்ப அவர்கள் செயல்பட்டிருக்கலாம்.

2011 ஆம் ஆண்டில் ஐ.நா. அறிக்கை ஒன்று 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சுமார் 40,000 உயிர்கள் பலியாகியதாக கூறி இருந்தது. அத்துடன் 1972 முதல் 2009 ஆம் ஆண்டுவரை சுமார் 100,000 உயிர்கள் பலியாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.