இலங்கை அரச Bondடில் சீனா புதிய நாட்டம்

CentralBank

அண்மையில் இலங்கை அரசு US$ 1.5 பில்லியன் Bondஐ விநியோகித்து இருந்தது. அந்த Bondடுக்கு கடந்த வருடங்களை விட நாலு மடங்கு அதிக நாட்டம் இருந்துள்ளது. இந்த அதிகரித்த நாட்டத்துக்கு முதல் முறையாக சீன முதலீடுகளின் ஆர்வம் காரணம் என்று கூறப்படுகிறது.
.
International Sovereign Bond (ISB) என்ற இந்த 10-வருட Bond 6.2% வீதத்தில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த $1.5 பில்லியன் bondக்கு மொத்தம் $11 பில்லியன் கேள்விகள் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது.
.

இம்முறையே சீன வங்கிகள் இலங்கை bondடில் ஆர்வம் கொண்டுள்ளனர் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.
.