இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து?

NewZealand2

இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து?

இலங்கை குடும்பம் ஒன்றை நியூசீலாந்தில் இருந்து வரும் 21 ஆம் திகதிக்கு முன் வெளியேற்ற முனைகிறது அந்நாட்டு குடிவரவு திணைக்களம். அதேவேளை அந்த குடும்பத்துக்கு உதவ முனைகின்றனர் உள்ளூர் மக்களும், அப்பகுதி அரசியல்வாதிகளும்.
.
Dinesha Amarasinghe 2010 ஆம் ஆண்டில் hospitality துறையில் படிக்க முறைப்படி விசா பெற்று நியூசீலாந்து சென்றவர். அவரின் விசா முதன்மை விசாவாக இருக்க, அவரின் கணவர் Sam Amarasinghe, அவர்களின் 3 மகன்கள் உட்பட அனைவரும் விசா பெற்று நியூசீலாந்து சென்று வாழ்ந்தார்.
.
Skilled migrant என்ற அடிப்படையிலான விசா பெற்ற Denesha பின்னர் சமையல் துறையில் தொழில் புரிய ஆரம்பித்தார். கணவரும் taxi ஓடுதல் போன்ற தொழில்களை தற்காலிக வேலை விசா பெற்று செய்துவந்தார். அவர்களின் 8, 10, 11 வயதுடைய மூன்று பையன்களும் அங்கேயே படித்து வந்தனர்.
.
2015 ஆம் ஆண்டில் Dinesha multiple sclerosis (MS) என்ற நோய்க்கு ஆளானார். அப்போதே இடர் தோன்றியது அந்த குடும்பத்தின் வாழ்க்கைக்கு. தொடந்து skilled நபராக வேலை செய்யமுடியாத Dinesha தனது skilled நபருக்கான விசாவை இழந்தார். முதன்மை விசா பறிக்கப்பட்ட அவரின் கணவரும் வேலை செய்யும் தற்காலிக விசாவை இழந்தார். இந்நிலையில் அவர்களின் வருமானம் துண்டிக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் நிலையும் தோன்றியது. அக்குடும்பம் நவம்பர் 21 ஆம் திகத்துக்குள் நியூசீலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு குடிவரவு திணைக்களம் கூறுகிறது.
.

அதேவேளை இந்த குடும்பத்துக்கு உதவ முனைவந்துள்ளார் சிலர். அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் Hamish Walker, Mark Patterson, குடிவரவு நலன்விரும்பி Shane Robinson ஆகியோரும் அடங்குவர்.
.