இலங்கை, தென்னிந்தியா வரும் பெருமழை

SriLankaIndia

இலங்கை மற்றும் தமிழ்நாடு, கேரளா உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மீண்டும் பெருமழை வருகிறது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடியுடனான இந்த பெருமழை இப்பகுதிகளில் பொழியலாம்.
.
இலங்கைக்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையிலான வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்படும் காலநிலை மாற்றங்களே இந்த பெருமழைக்கு காரணம்.
.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கோச்சி போன்ற தென்னிந்திய நகரங்கள் இம்மழையால் பெரிதும் பாதிக்கப்படும். இலங்கையின் முழுப்பகுதியும் இந்த மலையின் தாக்குதலுக்கு உள்ளாகும்.
.
தொடர்ச்சியாக பொழியவுள்ள இந்த மழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
.

பொழியப்போகும் பெருமழைக்கு காரணமான இந்த இந்த காலநிலை மாற்றம் சிலவேளைகளில் சூறாவளியாகவும் மாற்றம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
.