இலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில்

இலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில்

அமெரிக்காவின் சிக்காகோ நகரை தளமாக கொண்ட Beam Suntory என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு வழங்கிய  இலஞ்சத்துக்காக அமெரிக்க அரசுக்கு $20 மில்லியன் தண்டம் செலுத்துகிறது.

இந்தியாவில் தனது மதுபானங்களை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ய விரும்பிய Beam அதற்கான அனுமதியை பெற தனது இந்திய முகவர் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு  இலஞ்சம் வழங்கி இருந்தது. அத்துடன் அந்த  இலஞ்ச பணத்தை மறைக்க பொய்யான பதிவுகளையும் தமது கணக்கியலில் வைத்துக்கொண்டது.

ஆனால் இதை கண்டுபிடித்த அமெரிக்காவின் Department of Justice அந்நாட்டின் Foreign Corrupt Practices Act மூலம் Beam நிறுவனத்தை தண்டித்தது. குற்றத்தை ஏற்றுக்கொண்ட Beam $20 மில்லியன் தண்டம் செலுத்த இணங்கி உள்ளது.

Beam இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு மில்லியன் இந்திய நாணயத்தை ($18,000)  இலஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இலஞ்சத்தை Beam உயர் அதிகாரிகளே அனுமதித்து இருந்தனர்.

இலஞ்சம் பெற்ற இந்திய அரசியல்வாதிகள் மீது இதற்குப்பின்னரும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

2018 ஆம் ஆண்டிலும் Beam இந்தியாவில் இலஞ்சம் வழங்கியதை நிரூபித்த அமெரிக்காவின் Security and Exchange Commission $8.2 மில்லியன் தண்டம் விதித்து இருந்தது.