இஸ்ரவேலின் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்கும் ஐரோப்பா

இஸ்ரவேல் 1967 ஆம் ஆண்டில் கைப்பற்றிய பாலஸ்தீனியரின் நிலத்தில் தொடர்ச்சியாக யூத குடியிருப்புகளை செய்து வருவது தெரிந்ததே. அமெரிக்காவின் பாதுகாப்புடன் இந்த சட்ட விரோத குடியேற்றம் தொடர்ந்து வந்துள்ளது. ஐ. நா. வின் சட்டப்படி இது குற்றம் என்றாலும் அமெரிக்காவின் கையில் இருந்த இஸ்ரவேலை ஐ. நா. தடுப்பது இல்லை.

ஆனால் இந்த விடயத்தால் மிகவும் விசனம் அடைந்த ஐரோப்பிய கூட்டுறவு (EU) ஒரு சிறு படி முன்சென்று, 2014 ஆண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு விதிமுறையை உருவாக்கியுள்ளது. அந்த விதிமுறைப்படி 1967 எல்லைகளுக்கு அப்பால் உள்ள யூதர்களுக்கு EU மானியங்கள், நன்கொடைகள் எனபனவற்றை வழங்க மாட்டாது. இந்த பகுதிகள் பெரும் தொகை மிக சிறிது என்றாலும், EU 1967 எல்லைகளை அடையாளம் காண்பதுவும் அதன் அடிப்படையில் கொள்கைகள் அமைப்பதுவும் இஸ்ரேவேளுக்கு கடும் கோபத்தை உண்டாகியுள்ளது.