இஸ்ரேலில் இந்த வருடம் 3 தேர்தல்கள்?

Israel

இஸ்ரேலில் இந்த கிழமை நடந்து முடிந்த பொது தேர்தலில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை கைப்பற்றாத காரணத்தால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.
.
கடந்த ஏப்ரல் மாதம் அங்கு இடம்பெற்ற தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் போதிய ஆசனங்களை கைப்பற்றாத காரணத்தாலேயே இந்த கிழமை இரண்டாம் தேர்தல் நிகழ்ந்தது. ஆனால் இந்த தேர்தலும் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வல்லமையை வழங்கவில்லை.
.
மொத்தம் 120 ஆசங்களில், 33 ஆசனங்களை முன்னணியில் உள்ள எதிர் கட்சி வென்றுள்ளது. தற்போதைய பிரதமரின் கட்சி 31 ஆசனங்களை மட்டும் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
.
கூட்டு ஆட்சி அமைக்க பிரதான கட்சிகள் முனைந்தாலும், அந்த முயற்சிகளும் பயனற்று போயின. தற்போதை பிரதமர் Netanyahu வுடன் கூட்டு அமைக்க ஏனைய பிரதான கட்சிகள் விரும்பவில்லை.
.
தனக்கு வாக்களித்தால் தான் பாலஸ்தீனர்களின் West Bank பகுதிகளில் மேலும் பல இடங்களை இஸ்ரேல் வசமாக்குவேன் என்று கூறியிருந்தும் அவரால் போதிய வெற்றிகளை அடைய முடியவில்லை.
.