இஸ்ரேல், பாலஸ்தீனர் இன்றி 70 நாடுகள் பேச்சுவார்த்தை

UN_Israel_Palestinian

உலகிலேயே அதிககாலம் தீர்வுக்காக பேசப்பட்டு, ஆனால் தீர்வு எதையும் இதுவரை அடையாத விவகாரம், இஸ்ரேல்-பாலஸ்தான் மோதல். கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதவு அரசியல்வாதிகள் அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுள்ளும் நிரம்பி இருப்பதால், அவர்களின் ஆத்ரவுகளுடன் இஸ்ரேல் தன் விருப்பப்படியேயே புதிய வீடுகளை பாலஸ்தீனியர்கள் நிலங்களில் நிரப்பி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு தீர்வு அவசியம் இல்லாத ஒன்று.
.
ஆனாலும் பல உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா தவிர்ந்த ஏனைய மேற்கு நாடுகள் இஸ்ரேல் மீது படிப்படியாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளன. அண்மையில் இஸ்ரேல் பாலஸ்தீனர் நிலங்களில் இஸ்ரேலியர்களுக்கு வீடு கட்டுவது சர்வதேச சட்டங்களுக்கு முரண் என்று தீர்மானம் ஒன்றை ஐ.நா.வில் நிறைவேற்றி இருந்தன.
.
அதன் அடுத்த கட்டமாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட 70 க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் தற்போது பாரிஸ் நகரில் கூடுகின்றனர். இவர்கள் இஸ்ரேல்-பாலஸ்தான் விடயத்துக்கு விரைவில் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்த உறுதி கூறலாம் என்று கருதப்படுகிறது.
.

இந்த மாநாட்டுக்கு ,இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அழைக்கப்படாவிட்டாலும், பிரான்ஸ் நாட்டின் தலைவர் தீர்மானங்களை விபரிப்பர் என்று கூறப்பட்டது. பாலஸ்தீனர் அதை ஏற்றுக்கொண்டாலும், இஸ்ரேல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பதிலாக இஸ்ரேல் டிரம்பின் உதவியில் நம்பி உள்ளனர்.
.