ஈரானுக்கான British Airways, Air France சேவைகள் நிறுத்தம்

Iran

பிரித்தானியாவின் British Airways விமான சேவையும், பிரான்சின் Air France விமான சேவையும் ஈரானுக்காக சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. அமெரிக்காவின் பல நகரங்களுக்கு சேவை வழங்கும் இந்த விமான சேவைகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகளில் இருந்து தப்பவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
.
British Airway சேவையின் இறுதி சேவை செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் சென்று மறுநாள் பிரித்தானியா திரும்பும்.
.
Air France தெஹ்ரானுக்கான தனது இறுதி சேவையை செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மேற்கொள்ளும்.
.
KLM விமான சேவையும் ஈரானுக்கான சேவையை செப்டம்பர் மாதம் முதல் நிறுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.
.
ஐரோப்பாவின் Allianz என்ற காப்புறுதி நிறுவனம், Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம், Maersk என்ற கப்பல் நிறுவனம் என்பனவும் ஈரானுக்கான தமது சேவைகளை நிறுத்துவதாக கூறி உள்ளன.

.