ஈரானுள் கலவரங்கள், 21 பேர் பலி

Iran

ஈரானுள் கடந்த சில நாட்களாக கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த கலவரங்களுக்கு குறைந்தது 21 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
.
கலவரங்கள் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றன. ஒரு இடத்தில் அல்லாமல், நாட்டின் பல நகரங்களில் இந்த கலவரங்கள் இடம்பெறுகின்றன. ஈரானின் உள்ளக அமைச்சரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டு உள்ளோரில் 90% மானோர் 25 வயதுக்கும் குறைவானவரே.
.
கலவரத்தை செய்வோர் குறிப்பாக எந்தவொரு காரணத்தையும் வெளியிடவில்லை அல்லது பகிரங்கம் செய்யவில்லை. பதிலாக முழு இஸ்லாமிய தலைவர்களையும் பதவி விலக கூறப்பட்டுள்ளது.
.
ஈரானின் Supreme Leader Ayatollah Ali Kahmenei தனது உரையில் அந்நிய சக்திகளை இந்த கலவரங்களுக்கு காரணம் என்றுள்ளார். ஈரானின் எதிரிகள் பணம், ஆயுதம், கொள்கைகள், பாதுகாப்பு சேவைகள் போன்ற எல்லாவற்றையும் பயன்படுத்துவதாக Kahmenei கூறியுள்ளார்.
.