ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம், 150 பேர் பலி

Iran-Iraq

ஈரான்-ஈராக் எல்லையோரம், உள்ளூர் நேரப்படி ஞாயிரு இரவு 9:18 மணியளவில், இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு சுமார் 140 பேர் பலியாகியும், 1,500 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
.
எல்லையோரத்தில் உள்ள Sarpol-e Zahab என்ற சிறு கிராமத்தில் மட்டும் சுமார் 60 பேர் பலியாகி உள்ளனர். இப்பகுதிகள் மலைகள் நிறைந்த இடமாகையால் உதவிகள் பாதிக்கப்பட்டோரை அடைவதற்கும் இடராக உள்ளது.
.
அமெரிக்காவின் Geological Survey என்ற அமைப்பின் கணிப்புப்படி இந்த நிலநடுக்கம் 7.3 அளவிலானது. அத்துடன் இந்த நடுக்கத்தின் மையம் நிலத்துக்கு கீழ் சுமார் 33 km ஆழத்தில் இருந்துள்ளதாம். இந்த நடுக்கம் துருக்கி வரை உணரப்பட்டதாம்.
.
2003 ஆம் ஆண்டில் இப்பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு சுமார் 26,000 மக்கள் பலியாகி இருந்தனர்.
.