ஈரான் உடன்படிக்கையை ரம்ப் நிராகரிப்பு

Iran

2015 ஆம் ஆண்டு, ஒபாமா ஆட்சி காலத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா , சீனா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுடன் அணு ஆய்வுகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தன. அந்த ஒப்பந்தம் ஈரானின் அணு ஆய்வுகளை மட்டுப்படுத்தவும், பதிலா உலக நாடுகள் ஈரான் மீதான தடைகளை நீக்கவும் வழி செய்தது.
.
மேற்படி ஒப்பந்தத்துக்கு இணங்க சர்வதேச குழு ஒன்று அவ்வப்போது ஈரானின் செயல்பாடுகளை கண்காணித்து, ஈரான் இணங்கியபடி அணு ஆய்வுகளை தொடர்ந்தும் கட்டுப்படுத்தி உள்ளதா என்பதை ஏனைய நாடுகளுக்கு தெரிவிக்கும். மேற்படி குழு இதுவரை ஈரான் இணக்கப்படியே செயல்படுவதாக கூறியுள்ளது.
.
ஆனாலும் ரம்ப் இன்று ஈரான் இணைக்கப்படி செயப்படவில்லை என்று ஆதாரம் எதுவுமின்றி கூறி, உடன்படிக்கையை நிராகரிக்கும் ஆரம்ப நடவடிக்கையை எடுத்துள்ளார் (decertification). வரும் 60 நாட்களுள் அமெரிக்க காங்கிரஸ் ஈரான் மீது மீண்டும் தமது தடையை நடைமுறைப்படுத்தல் வேண்டும். காங்கிரஸ் அவ்வாறு செய்ய மறுப்பின், டிரம்ப் தான் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவேன் என்றுள்ளார்.
.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய தரப்புகள் தாம் தொடர்ந்து ஈரானுடன் இணைக்கப்படி செயல்படவுள்ளதாக கூறி உள்ளன.
.

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தனது சுய தடைகளை விதிப்பின், அப்போது ஈரானுடன் செயல்படும் ஜேர்மனி, ரஷ்யா, சீனா, ஆகிய நாட்டு நிறுவனங்களை அமெரிக்கா தண்டிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அவ்வாறு அமெரிக்கா செய்யின், அது அமெரிக்காவுக்கும் அதன் நடப்பு நாடுகளுக்கும் இடையில் ஒரு பொருளாதார யுத்தத்தை உருவாக்கும்.
.