ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க படையினர் பாதிப்பு

Iran-Iraq

ஜனவரி 8 ஆம் திகதி ஈரான் படையினர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவிய ஏவுகணைகளின் தாக்கத்தால் 11 அமெரிக்க படையினர் பாதிக்கப்பட்டு (concussion) உள்ளனர் என்று தற்போது அமெரிக்கா கூறுகிறது. மேற்படி தாக்குதலின் மறுதினம் அமெரிக்கர் எவரும் பாதிக்கப்படவில்லை என்றே ரம்ப் கூறி இருந்தார்.
.
இந்த செய்தியை அமெரிக்க Captain Bill Urban வியாழன் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட படையினருள் 8 பேர் ஜெர்மனியில் உள்ள Landstuhl Mediacl Center வைத்தியசாலைக்கும், 3 பேர் குவைத்தில் உள்ள Camp Arifja வுக்கும் எடுத்து செல்லப்பட்டு உள்ளனர்.
.
மேற்படி தாக்குதலுக்கு ஹெலி உட்பட பல உடமைகளும் பாதிக்கப்பட்டு இருந்தன.
.
மரணங்களை குறைக்கும் நோக்கில் ஈராக் மூலம் முன்னறிவிப்பு விடுத்தது பின்னரேயே ஈரான் மேற்படி தாக்குதலை செய்ததாக கருதப்படுகிறது.
.