ஈரான் மீதான தாக்குதல் இறுதி நேரத்தில் நிறுத்தம்

Iran

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இறுதி நேரத்தில் தன்னால் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். தாக்குதல் திட்டமிட்டபடி நிகழ்ந்தால் 150 ஈரானியர் மரணித்திருப்பர் என்ற பயம் காரணமாகவே தான் தாக்குதலை நிறுத்தியதாக ரம்ப்  கூறி உள்ளார்.
.
நேற்றைய தினம் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி இருந்தது. அந்த விமானம் தமது வான் பரப்புள் நுழைந்ததாலேயே தாம் சூட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறி இருந்தது. ஆனால் அமெரிக்கா மேற்படி வேவு விமானம் சர்வதேச வான் பரப்புள் இருந்ததாக கூறி உள்ளது.
.
வேவு விமானம் வீழ்ந்தவுடன் ரம்ப் அது தவறாக நடந்திருக்கக்கூடும் என்று கூறி இருந்தார். ஆனால் பின்னர் ஈரானுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் 3 இடங்களில் தாக்குதல் செய்ய தயார்படுத்தலுக்கு ரம்ப் ஆணை வழங்கியுள்ளார்.
.
தாக்குதல் இடம்பெற 10 நிமிடங்கள் இருக்கையில் ரம்ப் அந்த தாக்குதலை நிறுத்தி உள்ளார்.
.
அப்பகுதியால் பறக்கும் பல சர்வதேச பயணிகள் விமானங்கள் தமது பயண பாதையை மாற்றி அமைக்க தீர்மானித்து உள்ளன.

.