ஈரான் நேரப்படி இன்று சனி காலை இஸ்ரேல் தாக்குதல் செய்கிறது. தாம் ஈரானின் இராணுவ நிலையங்களை மட்டும் தாக்குவதாக கூறியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் முன்னறிவிப்பை அமெரிக்காவுக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா தான் தாக்குதலில் பங்கெடுக்கவில்லை என்று கூறியுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹிரானில் சனி அதிகாலை குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல் ஏற்படுத்திய சேதங்கள் இதுவரை அறியப்படவில்லை.