உத்தர பிரதேசத்தில் தாஜ்மஹால் இல்லாத உல்லாசம்

TajMahal

இந்தியா செல்லும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் முதல் விருப்பத்தில் உள்ளது தாஜ்மஹால். இந்தியாவுக்கும், தாஜ்மஹால் உள்ள பகுதிக்கும் அதிக அளவு வருமானத்தை வழங்கும் இந்த வரலாற்று சின்னத்தை மறைக்க முனைகிறது உத்தர பிரதேச மாநில பாரதீய ஜனதா அரசு. அண்மையில் இந்த மாநில அரசு வெளியிட்ட உல்லாச பயணிகளுக்கான 32 பங்கங்களை கொண்ட புத்தகம் ஒன்றில் தாஜ்மஹால் முற்றாக இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது.
.
உலகத்தின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான, 1631 ஆம் ஆண்டில் கடப்பட்ட தாஜ்மஹால் யுநெஸ்கோவில் (UNESCO) பதியப்பட்ட வரலாற்று கட்டிடம் ஒன்று. அப்படி இருக்கையில் அந்த மாநில உல்லாச துறைக்கான அமைச்சால் வெளியிடப்பட்ட Uttar Pradesh Tourism: Its High Potential என்ற புத்தகம் இந்து மற்றும் புத்த இடங்களை மட்டுமே கொண்டுள்ளது.
.
அந்த மாநில முதலமைச்சர் Yogi Adityanath தாஜ்மஹால் இந்திய கலாச்சாரம் அல்ல என்று முன்னர் கூறியுள்ளார். அத்துடன் இந்தியா வரும் உல்லாச பயணிகளுக்கு தாஜ்மஹால் சின்னத்தை வழங்குவதற்கு பதிலாக, இராமாயணம் போன்ற இந்து அடையாளங்களை வழங்கல் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
.

2014 ஆம் ஆண்டில் சுமார் 8 மில்லியன் உல்லாச பயணிகள் தாஜ்மஹால் சென்றுள்ளார். ஆனால் கடந்த வருடம் தாஜ்மஹாலுக்கு 6.2 மில்லியன் உல்லாச பயணிகள் மட்டுமே சென்று இருந்தார்கள். சுமார் 400,000 பேர் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ தாஜ்மஹால் தொடர்பான வேலைவாய்ப்பை கொண்டுள்ளார்.
.