உலகின் முதலாவது பணக்காரனின் விவாகரத்து

Amazon

Amazon என்ற Internet மூலமான விற்பனை நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos என்பவரின் திருமணமும் விவாகரத்தில் முடிகிறது. இவரே தற்போது உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $137 பில்லியன் ($137,000,000,000) என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
தற்போது 54 வயதான இவர் 25 வருடங்களுக்கு முன் MacKenzie Tuttle என்பவரை திருமணம் செய்திருந்தார். 1994 ஆம் ஆண்டில் இவர் ஆரம்பித்த Amazon நிறுவனத்தில் இவரின் மனைவி முதலில் கணக்காளர் ஆக பதவி வகித்திருந்தவர். இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உண்டு.
.
விவாகரத்தின் பின் 48 வயதான இவரின் மனைவி உலகின் முதலாவது செல்வந்த பெண்ணாக இருப்பர்.
.
Jeff Bezos விடம் சுமார் 16% Amazon நிறுவன பங்குகள் உள்ளன. தற்போதை Amazon பங்கு சந்தை விலைப்படி, Bezos வின் பங்குச்சந்தை பெறுமதி சுமார் $130 பில்லியன் ஆகும். விவாகரத்தின் பின் இவரின் மனைவி சுமார் அரை பங்கை பெறக்கூடும்.
.
Jeff Bezos க்கும், 49 வயதான Lauren Sanchez என்பவருக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்றும், அதுவே விவாகரத்துக்கு காரணமாகலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

.