உளவாளி கொலைக்கு ரஷ்யாவை சாடுகிறது பிரித்தானியா

UK

இந்த மாதம் 4ஆம் திகதி ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய Sergei Skripal, பிரித்தானியாவின் Salisbury நகரில் chemical weapon தாக்குதல் ஒன்றுக்கு ஆளாகி இருந்தார். அவருடன் 33 வயதுடைய அவரின் மக்களும் தாக்கப்பட்டார். இருவரும் தற்போது உயிருக்காக போராடி வருகின்றனர்.
.
இந்த தாக்குதலை பிரித்தானிய காவல்துறை விசாரணை செய்து வந்திருந்தது.
.
இன்று பிரித்தானியாவின் பிரதமர் மே (Theresa May) இந்த தாக்குதலை ரஷ்ய அரசு செய்திக்கவேண்டும், அல்லது அவர்களிடம் இருந்து பெறப்பட்ட chemical weapon மூலம் வேறு சிலர் இந்த தாக்குதலை செய்திருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நச்சு பொருள் இராணுவ வகை Novichok என்ற chemical ஆயுதமாகும்.
.
மேற்படி ரஷ்ய உளவாளி இன்னோர் ரஷ்ய உளவாளியை பிரித்தானியாவின் M16 என்ற உளவு அமைப்புக்கு காட்டிக்கொடுத்தார் என்று கூறி ரஷ்யாவால் தண்டிக்கப்பட்டவர். 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உளவாளிகள் கைமாற்று நடவடிக்கை ஒன்றில் இவர் பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டார்.
.