ஊழல் சுட்டியில் இலங்கை 94ம் இடத்தில்

ஊழல் சுட்டியில் இலங்கை 94ம் இடத்தில்

ஜெர்மனியை தளமாக கொண்ட Transparency International இன்று வியாழன் வெளியிட்ட 2020ம் ஆண்டுக்கான உலக ஊழல் சுட்டியில் இலங்கை நூற்றுக்கு 38 புள்ளிகளை (38/100) பெற்று 94ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த கணிப்பிற்கு உட்பட்டு இருந்தன.

நியூசிலாந்தும், டென்மார்க்கும் 88/100 புள்ளிகளை பெற்று 1ம் இடத்தில் உள்ளன.

சிங்கப்பூர் 85/100 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, சுவிஸ், சுவீடன் ஆகிய நாடுகளும் கூடவே 3ம் இடத்தில் உள்ளன.

ஹாங் காங் 77/100 புள்ளிகளை பெற்று 11ம் இடத்தில் உள்ளது. பிரித்தானியா, கனடா, அஸ்ரேலியா ஆகிய நாடுகளின் 11ம் இடத்தில் உள்ளன.

ஜப்பான் 74/100 புள்ளிகளை பெற்று 19ம் இடத்தில் உள்ளது.

சீனா 42/100 புள்ளிகளை பெற்று 78ம் இடத்தில் உள்ளது.

இந்தியா 40/100 புள்ளிகளை பெற்று 86ம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 31/100 புள்ளிகளை பெற்று 124ம் இடத்தில் உள்ளது.
பங்களாதேசம் 26/100 புள்ளிகளை பெற்று 146ம் இடத்தில் உள்ளது.

சோமாலியாவும், தென் சூடானும் 12/100 புள்ளிகளை பெற்று இறுதி நிலையான 179ம் இடத்தில் உள்ளன.