எகிப்தின் சர்வாதிகாரி சிசிக்கு ரம்ப் வாழ்த்து

EgyptElection

கடந்த கிழமை எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தல் போட்டியிட்டோரில் ஒருவர் தற்போதை ஜனாதிபதி சிசி (Sissi). சிசி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மோர்சியை (Morsi) இராணுவ கவிழ்ப்பு மூலம் சிறையில் அடைத்து பதவிக்கு வந்தவர்.
.
இம்முறை தேர்தலிலும் தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய லெப். ஜெனரல் Sami Anan, கேணல் AhmedKonsowa ஆகிய வேட்பாளர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை மட்டும் தன்னுடன் போட்டியிட நிறுத்தியிருந்தார்.
.
இன்று எகிப்து அரசு சிசி 97% வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆகியுள்ளார் என்று கூறியுள்ளது. ஆனால் 41% வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க சென்றிருந்தனர். 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் இது 6% ஆல் குறைந்த தொகையே.
.

சிசியின் சர்வாதிகார வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இன்று திங்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதேவேளை அமெரிக்கா எகிப்துக்கு வழங்கவிருந்த நன்கொடைகளில் $300 மில்லியனை மனித உரிமைகள் மீறல் காரணமாக பிடித்து வைத்துக்கொண்டு மிகுதி $1.3 பில்லியனை ($1300 மில்லியன்) வழங்கியும் உள்ளது.
.