எகிப்து கிறீஸ்தவர் மீது தாக்குதல், 26 பலி

Egypt

எகிப்தில் இன்று வெள்ளிக்கிழமை IS ஆதரவு குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு குறைந்தது 26 கோப்ரிக் (Coptic) கிறீஸ்தவர்கள் பலியாகி உள்ளனர். அத்துடன் 25 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
.
பஸ்களில் Minya என்ற சென்றுகொண்டிருந்த கிறீஸ்தவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. மூன்று வாகனங்களில் வந்த 8 முதல் 10 எண்ணிக்கையிலான IS ஆதரவு ஆயுததாரர் இந்த கொலையை செய்துள்ளார்.
.
எகிப்து முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்றாலும், அங்கு சுமார் 10%மானோர் கிறீஸ்தவர் ஆவர்.
.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இரண்டு தாக்குதல்களுக்கு சுமார் 50 கிறீஸ்தவர் பலியாகி இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்து தாக்குதலுக்கு 29 கிறீஸ்தவர் பலியாகி இருந்தனர்.
.