எண்ணெய் விலை மேலும் குறையும்

Oil_Well

சவுதி அரேபியா மே மாதம் முதல் தமது நாள் ஒன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை மேலும் 600,000 பரல்களால் அதிகரிக்க உள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளது. அவ்வாறு சவுதி தனது உற்பத்தியை அதிகரிப்பின், மே மாதம் முதல் சவுதி 10.6 மில்லியன் பரல்களை நாள் ஒன்றில் உற்பத்தி செய்யும்.
.
ஏற்கனவே மிகையான எண்ணெய் உற்பத்தியை கொண்டுள்ள சந்தை சவுதியின் மேலதிக உற்பத்தியால் விலையை மேலும் கீழே தள்ளும். கொரோனா வைரசால் உலகம் முடங்கி உள்ளதாலும் எண்ணெய் பாவனை சுமார் 20% ஆல் குறைந்து உள்ளது.
.
இன்று சராசரி எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு $20 க்கும் குறைவாக உள்ளது. இந்த விலை கடந்த 18 வருடங்களில் இருந்த அதி குறைந்த விலையாகும்.
.
ரஷ்யாவின் நோக்கம் அதிக உற்பத்தி செலவு கொண்ட அமெரிக்க shale எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை சந்தையில் இருந்து விரட்டுவதாக இருந்தால், அந்த நோக்கம் ஓரளவுக்கு சாத்தியமாக உள்ளது. இந்த நிலையை தடுக்கும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் உரையாடி உள்ளார்.
.
பூட்டின் அமெரிக்காவுக்கு உதவ முன்வரின், பதிலுக்கு அமெரிக்காவை ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளை நீக்கும்படி பூட்டின் வேண்டுகோள் விடுக்கக்கூடும். அவ்வகை வேண்டுகோளுக்கு அமெரிக்கா இணங்குமா என்பதுவும் கேள்விக்குறியே.
.
அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியில் இருந்து வெளியேரின், பின் மற்றைய நாடுகள் எண்ணெய் விலையை மீண்டும் தம் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரிக்கலாம்.
.