எதிர்ப்புகள் மத்தியில் வடகொரியா ஏவிய ஏவுகலம்

NorthKoreaRocket

ஐ.நா., அமெரிக்கா, தென்கொரியா ஆகியவற்றின் கடும் எதிர்ப்புகளையும் புறம்தள்ளி ஏவுகலம் ஒன்றை சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு வடகொரியா ஏவியுள்ளது.
.
வடகொரியா தாம் உலகை கண்காணிக்கும் செய்மதி ஒன்றை ஏவ உள்ளதாக முன்னரே கூறியிருந்தது. ஆனால் அமெரிக்கா இந்த ஏவுகலம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைக்கான பரீட்சார்த்தமே என்றது. அதாவது வடகொரியா அமெரிக்காவை தாக்கவல்ல ICMB வகை ஏவுகணையை தயாரிக்க முனைகிறது என்றது.
.
வடகொரியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகலம் ஜப்பானின் ஒக்கிநாவா தீவுகளின் மேலால் சென்றதாக ஜப்பான் கூறியுள்ளது.
.
அவசரகால ஐ.நா. பாதுகாப்பு கூட்டம் (Security Council) ஒன்றுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறலாம்.
.
கடந்த மாதம் வடகொரியா தாம் ஐதரசன் (hydrogen) குண்டு ஒன்றை பரீட்சார்த்த முறையில் வெடிக்கவைத்ததாகவும் கூறியிருந்தது. அந்த வெடிப்பின் தாக்கம் மிக குறைவாக இருந்ததால் மேற்கு நாடுகள் அது ஐதரசன் குண்டாக இருக்க முடியாது என்று கருத்து வெளியிட்டு இருந்தன.

.