நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 26) இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான National People’s Party (NPP) கட்சி மொத்தம் 30 ஆசனங்களில் 15 ஆசனங்களை வென்றுள்ளது.
இப்பகுதியில் இம்முறை NPP 47.6% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த சனாதிபதி தேர்தலில் NPP இங்கே 51.4% வாக்குகளை பெற்று இருந்தது.
சஜித் தலைமையிலான SJB கட்சி 6 ஆசனங்களையும், SLPP கட்சி 3 ஆசனங்களையும், People’s Alliance கட்சி 2 ஆசனங்களையும் வென்றுள்ளன. வேறு இரு கட்சிகள் 2 ஆசனங்களையும், சுயேற்சை குழு 2 ஆசனங்களையும் வென்றுள்ளன.
மொத்தம் 55,643 வாக்குகளை கொண்ட இந்த பிரதேச சபை தேர்தலில் 36,825 வாக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன.