ஏலத்தில் 12,000 பவுண்ட்ஸ் பெற்ற காந்தியின் கடிகாரம்

ஏலத்தில் 12,000 பவுண்ட்ஸ் பெற்ற காந்தியின் கடிகாரம்

மஹாத்மா காந்தி பயன்படுத்திய சுவிஸ் கடிகாரம் ஒன்று (pocket watch) 12,000 பிரித்தானிய பவுண்ட்ஸ் பெறுமதிக்கு (சுமார் $16,000) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இக்கடிகாரம் தற்போது இயங்கும் நிலையில் இல்லை.

Mohanlal Sharma என்ற மரவேலை செய்பவர் ஒருவர் காந்தியின் அமைப்பில் தொண்டராக பணியாற்றி இருந்தார். அவருக்கே மேற்படி கடிகாரத்தை காந்தி 1944 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.

Sharma அந்த கடிகாரத்தை தனது பேரனுக்கு 1975 ஆம் ஆண்டில் வழங்கி இருந்தார். பேரனே தற்போது மேற்படி கடிகாரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்கிறார். East Bristol Auctions என்ற ஏல நிறுவனத்தால் விற்பனைக்கு விடப்பட்ட கடிகாரத்தை அமெரிக்கர் ஒருவரே கொள்வனவு செய்துள்ளார்.

காந்தியின் மூக்கு கண்ணாடி ஒன்று ஆகஸ்ட் மாதம் 260,000 பிரித்தானிய பவுண்ட்ஸ் பெறுமதிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.