ஐ.நா.: பலஸ்தீனத்தில் 112 சட்டவிரோத நிறுவனங்கள்

UN_Israel_Palestinian

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கைப்பற்றிய பலஸ்தீனர்களின் பகுதிகளில் இயங்கும் 112 இஸ்ரேல் சார்பு நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா. இன்று வெளியிட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறு செய்வது இதுவே முதல் தடவை.
.
இந்த பட்டியலில் இடம்பெறும் 94 நிறுவனங்கள் இஸ்ரேல் நிறுவனங்கள். ஏனைய 18 நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்கள். இவற்றில் சில மிக பெரிய அமெரிக்க நிறுவனங்கள். தமது நிறுவனங்களை சட்டவிரோத நிறுவனங்கள் என குறிப்பிடுவதையிட்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் குமுறுகின்றன.
.
Airbnb (அமெரிக்கா), Booking.com (நெதர்லாந்து), Egis Rail (பிரான்ஸ்), Expedia (அமெரிக்கா), TripAdvisor (அமெரிக்கா), General Mills (அமெரிக்கா), Motorola (அமெரிக்கா) ஆகிய நிறுவனங்களும் மேற்படி பட்டியலில் அடங்கும்.
.
1967 ஆம் ஆண்டில் இஸ்ரேல் கைப்பற்றிய பலஸ்தீனத்தீனர் இடங்களிலேயே மேற்படி நிறுவங்ககள் இயங்குகின்றன. கைப்பற்றிய இடங்களில் வர்த்தகம் செய்வது சர்வதேச சட்டங்களுக்கு முறையானது.
.